முஸ்லிம் சமூகம் , மத கலாசார ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்று தருவதாக புத்தசாசன சமய விவகார கலாசார அமைச்சர் கலாநிதி சுனில் ஹினிதும செனவி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபைக்கு, தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் அபேட்சகர்கள் அடங்கிய குழுவினர் அண்மையில் அமைச்சரை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் மத கலாசாரம் சார்ந்த பல பிரச்சினைகள் தொடர்பில் தூது குழுவினர் விரிவாக அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளனர்.
அதன்போது விரைவில் இது தொடர்பாக தீர்வுகளை பெற்று தருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.
அபேட்சகர் எம் .கே. எம் நௌபர் தலைமையிலான தூதுக்குழுவில், எம். ஆர் .எம். இம்திகாப், எம் .ஆர் .பௌமுதீன், எம். டி .எம் .பைரூஸ், எம் ஜே சம்சுதீன், பஸ்மினா ஹுசைன், எஸ். ஹெச் .எம். ரிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சரின் சார்பில் அமைச்சின் இணைப்புச் செயலாளர் மல்ஹர் கலந்து கொண்டிருந்தார்.

