பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய திறப்பனை பொலிஸ் பிரிவின் புஞ்சிகுளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (27) அதிகாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைதுசெய்துள்ளதுடன் துப்பாக்கி ஒன்றையும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய திறப்பனை பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

