8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன் ஒருவர் கைது

88 0
மாவத்தகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.