மார்ச் 22 ம் திகதிஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ்நிலையத்திற்கு உட்பட பகுதியில் அமைந்துள்ள வணிகவளாகத்தில் ஸ்டிக்கர் ஒன்றினை ஒட்டியமைக்காக 20 வயது முஸ்லீம் இளைஞர் ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்கைதுசெய்யப்பட்டுள்ளார் என மனித உரிமை ஆர்வலர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது
ஸ்லேவ்ஐலண்ட் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வணிகவளாகத்தின் ஒரு பகுதியில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து நபர் ஒருவர் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த ஸ்டிக்கர்களை படமெடுத்து பொலிஸாருக்கு அனுப்பிய நபர் ஒருவர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் யார் அந்த ஸ்டிக்கர்களை ஒட்டிய நபர் என்பதை கண்டுபிடித்துள்ளதுடன்இ22ம் திகதி காலை அந்த இளைஞர் அலுவலகத்திற்கு வரும்வேளை அங்கு காத்திருந்துஇகைதுசெய்யப்பட்டு;ள்ளனர்.
அந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டவேளை அரச புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் அங்கு காணப்பட்டனர்.கைதுசெய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளிற்காக பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.மேலதிக விசாரணைகளை தொடர்ந்து அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைது குறித்து சீற்றம் வெளியிட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்ர்கள் இஸ்ரேலியர்கள் இலங்கையில் சட்டவிரோத விசாக்களுடன் நடமாடலாம்இஆனால் தனது சீற்றத்தை சுவரொட்டி மூலம் வெளிப்படுத்திய ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுகின்றார் என தெரிவித்துள்ளனர்.

