இன்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை

72 0

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர்வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தி உள்ளது.