பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது !

63 0
பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திவுலான சந்திக்கு அருகில், சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அரலகங்வில முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் வியாழக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், 32 மற்றும் 60 வயதுடைய காலிங்கஎல மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடம் இருந்து, உழவு இயந்திரங்கள் மற்றும் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.