யாழில் பஸ் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

58 0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை (21) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் 2 ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி செம்மணி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது, அவ்வீதியால் வந்த அரச பஸ் அவரை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (21) உயிரிழந்துள்ளார்.