பாதுக்கையில் ரயில் – கார் மோதி விபத்து ; ஒருவர் காயம்

66 0

பாதுக்கை , லியன்வல, துத்திரிபிட்டிய பிரதேசத்தில் களனிவெளி ரயில் கடவையில் ரயிலுடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளது.

அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காரின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் பாதுக்கை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.