தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியில் பெல்வெஹெர பிரதேசத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் கார் மீது சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆறு பேர் காயமடைந்தள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழந்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் சுற்றுலாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

