வேன் விபத்தில் ஒருவர் பலி ; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

62 0
அம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெபரவெவ – பன்னேகமுவ வீதியில் வீரவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மற்றும் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி மற்றும் அதில் பயணித்த 08 பேரும் சிகிச்சைக்காக தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.