திக்வெல்ல – உருகமுவ பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 29 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடையவராவார்.
மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 400 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

