தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணி உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.

