உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(18) அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றன.
இதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பாக காரைதீவு பிரதேச சபை வேட்பு மனுக்களுக்கான கட்டுப்பணம் இன்று (18) அம்பாறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.
இதன் போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் உப தலைவர் கலாநிதி ஹக்கீம் செரீப் உட்பட ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ஏ.எம். அகுவர் ஆகியோர் இணைந்து கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.

