புலத்கொஹுபிட்டியவில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

74 0

கேகாலை – புலத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துல்கல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (17) மாலை வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர்  புலத்கொஹுபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலத்கொஹுபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்ட்ட சந்தேக நபர் வரக்காஹேன பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்கொஹுபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.