பொகவந்தலாவ பகுதியில் வாள்வெட்டு ; விசாரணைகள் ஆரம்பம்

101 0

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறினால் நபர் ஒருவர் பொகவந்தலாவை நகரப்பகுதியில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

தாக்குதல் மேற்கொண்ட நபர் சனிக்கிழமை (15) தனது தங்க சங்கிலி ஒன்றை காணாமல் போயுள்ளதாகவும் தனது தங்க சங்கிலியை தாக்குதலுக்கு உள்ளான நபர் களவாடியதாக கூறி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நபர் பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இருதரப்பினருக்கிடையில் இடம் பெற்ற பிரச்சினை சமரசம் அடைந்த நிலையிலே இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரை இரண்டு பேர் கொண்ட குழுவினர் கத்தியால் வெட்டும் சம்பவம் பொகவந்தலாவை நகரில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி.கமராவில் பதிவாகியுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்களும் தலைமறைவாகியுள்ளதோடு சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொகவந்தலாவை பொலிஸார்  மேற்கொண்டு வருவதாகவும் தாக்குதலுக்கு உள்ளான நபர் பலத்த வெட்டு காயங்களுடன் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக  டிக்கோயா கிழங்கின் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.