மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட குடியிருப்பாளர்களுக்கான வீட்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

85 0

பதுளை  மாவட்டம் பூனாகலை கபரகலை தோட்ட குடியிருப்புக்கள் 2023ம் ஆண்டு மார்ச் மாதம்  மண் சரிவினால் சுமார் 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வருட காலமாக பூனாகலை மாகந்த தேயிலை தொழிற்சாலையில்  தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

கடந்த இரண்டு வருட காலமாக தேயிலை தொழிற்சாலையில் வாழ்ந்து வந்த 51 குடும்பங்களுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 15 ஆம் திகதி 10 பேர்ச் காணியில் நிரந்தரமான வீடுகளை அமைத்து கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு வீட்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் போது பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்  K.V சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில விஜயசேகர, அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்தகீர்த்தி, நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் தீப்தி குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் வசந்த ரொட்ரிகோ, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் காமினி மஹகமகே  உட்பட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல்  மற்றும் பிரதேச செயலாளர் தோட்ட முகாமையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்ததுடன் 10 பேர்ச் காணியுடன் இவ் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒரு வீட்டுக்கு சுமார் 28 இலட்சம் செலவிடப்படவுள்ளதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அளவில் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.