ஈரானால் உருவாக்கப்பட்ட இந்த காடையர்கள் அமெரிக்க விமானங்கள் மீது ஏவுகணைகைள ஏவியுள்ளனர் எங்கள் படையினர் சகாக்களை தாக்கியுள்ளனர் என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கையால் பல பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதல்களை சகித்துக்கொள்ளப்போவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எங்கள் நோக்கத்தை அடையும்வரை கடுமையான படைபலத்தை பயன்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கொடிகளுடன் கப்பல்கள் சூயல்கால்வாய் ஊடாக பயணித்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது என தெரிவித்துள்ள டிரம்ப் கிழக்கு ஆபிரிக்காவிற்கும் அராபிய வளைகுடாவிற்கும் இடையிலான கடற்பரப்பில் அமெரிக்க யுத்த கப்பல்கள் பயணித்து நான்கு மாதங்களாகிவிட்டது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நீங்கள் இதனை நிறுத்தாவிட்டால் நீங்கள் ஒருபோதும் பார்த்திராதவகையில் நரகம் உங்கள் மீது மழைபோல பொழியும் என டிரம்ப் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின் இந்த தாக்குதல்கள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர் என ஹெளத்தி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்திற்காக இஸ்ரேலினதும் அதன் ஆதரவு நாடுகளினதும் கப்பல்களை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுவரும் ஹெளத்தி அமைப்பு பதில் தாக்குதல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
யேமனின் சனா சடா பிராந்தியங்களில் தொடர்ச்சியான வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஹெளத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
சனா விமானநிலையம் இராணுவதளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து கருப்புபுகைமண்டலம் வெளியாவதை காணமுடிகின்றது.

