டெல்லி கெபிடெல்ஸ்(DC) அணியின் தலைவராக அக்சர் படேல்(Axar Pate) நியமிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
18ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அனைத்து அணிகளும் தங்களது அணித்தலைவரை நியமித்திருந்த நிலையில்,டெல்லி கேப்பிடல்ஸ் அணி மட்டும் அணித்தலைவரை நியமிக்காமல் இருந்தது.
டெல்லி அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதனை நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி கெபிடெல்ஸ் அணியின் தலைவராக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கேப்பிட்டல்ஸ் அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராக உள்ளேன் என டெல்லி அணியின் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

