தமிழக மீனவர்கள உட்பட்ட இந்திய மீனவர்கள் சர்வதேச கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக்காணும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இது தொடர்பில் நேற்று உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
புதுடில்லியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய பிராந்தியங்களின் 13 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அரச தரப்பில் இருந்து பிரதமர் அலுவலக அதிகாரிகள், கரையோர பாதுகாப்பு அதிகாரிகள், இந்திய விவசாயத்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
ஏற்கனவே கடந்த பெப்ரவரி 5ஆம் திகதியன்று இடம்பெற்ற இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அமர்வின்போது இந்தப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்காணப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டமைக்கு அமையவே நேற்றைய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் இந்திய மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையாக இதனை கருத்திற்கொண்டு விரைவில் தீர்வு ஒன்றை காண கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து தரப்பினரும் இணங்கியதாக இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் விகாஸ் ஸ்வரப் தெரிவித்துள்ளார்.
இதற்காக செயன்முறை மிக்க மீன்பிடி முறைகளை பயன்படுத்துவது என்றும் இணக்கம் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.
September 13, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025