மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ; ஒருவர் பலி ; ஒருவர் காயம்

74 0
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 58.8ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 04.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, பின்புறத்தில் மோதிய லொறியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த லொறியின் சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.