பருத்தித்துறை – பொன்னாலை வீதியில், தொண்டைமனாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு வல்வெட்டித்துறை சந்தியில் வியாழக்கிழமை (14) நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடற்கரையோரமாகச் செல்லும் இந்த வீதியின் பாதுகாப்புச் சுவர்கள் கூட கடந்த காலத்தில் விழுந்துள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்த வீதி புனரமைக்கப்படுவது முக்கியமானது. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வீதிப் புனரமைப்புக்கு நிதி கோரியிருந்தார். அதற்கு அமைவாக நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக ஜனாதிபதிக்கும், நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் வடக்கு மக்கள் சார்பில் இந்த நேரத்தில் நன்றிகளைக் கூறுகின்றேன். அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் வீதி அபிவிருத்திக்காக இந்த ஆண்டுக்கு மாத்திரம் 5,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கின்றது. எதிர்காலத்தில் இங்கு பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், யாழ்.மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், பருத்தித்துறை பிரதேச செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



