விலங்கு கணக்கெடுப்புக்கு பாராளுமன்றுக்கு விடுமுறை கோரிய சாமர சம்பத் எம்பி

88 0

விலங்கு கணக்கெடுப்பு நாளை சனிக்கிழமை (15) நடைபெறவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை விடுமுறை  வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இன்று வெள்ளிக்கிழமை (14) கோரியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கம் நாளைய தினம் காலை 8.00 மணி முதல் 8.05 மணி வரை விலங்கு கணக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நாளை பாராளுமன்றத்திற்கு விடுமுறை வழங்குமாறு சபாநாயகரை நாங்கள் வலியுறுத்துகிறோம். நாங்கள் எங்கள் கிராமங்களுக்குச் சென்று எங்கள் பகுதிகளிலுள்ள விலங்குகளை காணக்கெடுப்பு செய்ய வேண்டும். நாங்கள் பாராளுமன்றத்தில் இருந்தால் எங்கள் பகுதிகளிலுள்ள விலங்குக்கு யார் காணக்கெடுப்பு செய்வது என கேள்வி எழுப்பியுள்ளாார்.