எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று (14) யாழ். மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அணியினரின் தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் யாழ்.மாநகர சபை, உள்ளிட்ட 17 சபைக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

