தமிழ்நாடு வரவு – செலவு திட்டம் இன்று தாக்கல்

11 0

தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு வரவு-செலவு திட்டத்தை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன