டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு

64 0

இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள கிளைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.drp.gov.lk க்கு பிரவேசித்து, பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத, இம்முறை கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை விண்ணப்பதாரிகள் இருப்பின், அவர்கள் பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரால் சான்றளிக்கப்பட்ட, முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொண்டு வர வேண்டும் என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2025 மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது