கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

17 0

கிளிநொச்சி- தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஏ 35 பிரதான வீதியில் பயணித்த கப்ரக வாகனத்தை சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக. இன்று சோதனையிடப்பட்டது.

இதன்போது, 05 கிராமம் 720 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.