விமானப் பணிப்பெண்கள் மற்றும் பயணிகளிடம் அத்துமீறிய நபரொருவர் விமான நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த விமானமொன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் யாழ்ப்பாணம் நயினாதீவை வசிப்பிடமாகக் கொண்ட 65 வயதான ஒருவர் என்று தெரியவந்துள்ளது.

