கனடா தேர்தலில் கார்னியின் வெற்றிக்குப் பிறகு, ட்ரூடோ நாடாளுமன்றத்திலிருந்து நாற்காலியுடன் வெளியேறும் புகைப்படம் வைரலாகியுள்ளது. அவரது நகைச்சுவை உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கனடா தேர்தலில் கார்னியின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அதிகார மாற்றத்திற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. அதன்படி, ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று புதிய லிபரல் கட்சித் தலைவரும் பிரதமராக நியமிக்கப்பட்டவருமான மார்க் கார்னியைச் சந்தித்தார்.
இதற்கிடையில், ட்ரூடோ அரசாங்கத்தில் தனது பதவிக்காலம் முடிவடைவந்து வெளியேறியுள்ளார்.
அந்நாட்டின் நாடாளுமன்றமான ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இருந்து தனது நாற்காலியை ட்ரூடோ எடுத்துச் செல்லும் தருணத்தை ரொய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.
ட்ரூடோ தனது நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு கையில் நாற்காலியுடன் இருக்கும் அந்தப் புகைப்பட்டம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ட்ரூடோ பிரதமர் பதவியிலிருந்து விலகும்போது எடுக்கப்பட்டுள்ள இந்த வித்தியாசமான படம் அவரது பிரியாவிடையின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தப் படம் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை விரைவாக ஈர்த்தது. அவர்கள் ஜஸ்டின் ட்ரூடோவின் நகைச்சுவை உணர்வைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள். அவரது இந்த விளையாட்டுத்தனமான சைகை பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது

