பட்டலந்த தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இன்று (11) இதனைக் கூறினார்.
படலந்த முகாம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய குறித்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

