பாப்பரசர் பிரான்சிஸுக்கு நிமோனியாவால் உடனடியான உயிர் ஆபத்து இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிகிச்சை பெறுவதற்காக அவரை இன்னும் பல நாட்கள் மருத்துவமனையில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர், நிலையாக இருப்பதாகவும், அண்மைய நாட்களில் ஒருங்கிணைந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

