கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவிடம் 3 மணிநேர வாக்குமூலம் பதிவு!

70 0
கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

கதிர்காமம் ஆலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக திஷான் குணசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (10) ஆஜராகியிருந்தார்.

இதன்போது, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், திஷான் குணசேகரவிடமிருந்து 3 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.