தலவாக்கலையில் தனித்து களமிறங்கும் இராதாகிருஷ்ணன்

74 0

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தலவாக்கலை பிரதேசத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பதுளை மாவட்டத்திலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிடவுள்ளது. ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியோடு கூட்டணியாக நாம் களமிறங்குவோம்.

தலவாக்கலை என்பது மலையக மக்கள் முன்னணியின் கோட்டை. அங்கு நாம் தனித்து களமிறங்கி தலவாக்கலை, லிந்துலை சபைகளைக் கைப்பற்ற வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய இடங்களில் கூட்டணியாக சொல்வோம் என்றார்.