அத்துடன் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்தும் செயற்படுவராயின் அவரது சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
திருடர்களை இன்னும் கைது செய்யவில்லையா என சிலர் எம்மை பார்த்து கேட்கின்றனர். நாம், சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அரசியல் தலையீடு இன்றி விசாரணைகளை மேற்கொள்ள கூடிய பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ளோம்.நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தக் கூடிய வாய்ப்பை அவர்களுக்கு நாம் ஒப்படைத்துள்ளோம். தற்போது அந்தத் திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் மேற்கொண்ட பல குற்றங்கள் மறைக்கப்பட்டு வந்தன.தற்போது அந்த குற்றங்கள் நீண்டகாலத்துக்கு பின்னர் வெளியில் வர ஆரம்பித்துள்ளன. ரணில் விக்கிரமசிங்கவிடம் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பட்டலந்த விவகாரம் தொடர்பில் அல்ஜசீராவில் வினப்பட்டது.இந்த விடயங்களுடன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பில் சட்டத்தின் பிடியில் இருந்தவரை ரணில் விக்கிரமசிங்க திருமண வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.அவரை இங்கு வைத்திருந்தால் சட்ட ரீதியாக அவரை கைது செய்ய முடியும் என நான் கூறினேன்.ஆனால் அது தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் திருமண வீட்டுக்கு செல்பவரை மீண்டும் அழைக்க முடியம் என அவர் கூறினார்.இந்த மூன்று குற்றங்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டும்.ரணில் இதுவரை காலம் அரசியலுக்குள் ஒழிந்துக் கொண்டிருந்தார்.எவர் எங்கு ஒளிந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.சட்டத்துக்கு அமைய அவர் செயற்பட்டிருந்தால் இன்று தலைமறைவாகி இருக்க வேண்டி அவசியம் ஏற்பட்டிருக்காது.எமது அரசாங்கத்தின் போது அவர் குற்றமிழைத்திருந்தால் நாம் அவரது பதவியை கருத்திற்கொள்ளாமல் நடவடிக்கை எடுத்திருப்போம். பொலிஸாரினால் அவர் தேடப்பட்டுக்கொண்டிருக்கொண்டிருக்கிறார்.அவர் சட்டத்துக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்தும் செயற்படுவராயின் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமுள்ளது.
தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபரினால் கையொப்பமிடப்பட்ட சுற்றறிக்கை உள்ளது.அதில் குற்றம் இழைக்கப்பட்டு அது தொடர்பில் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பிதிருக்காமாயின் அவரது சொத்துக்களை முடக்க முடியும். குற்றவியல் தண்டனைக்கோவை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.அந்த பணியை நாம் தேசபந்து தென்னக்கோனில் இருந்து ஆரம்பிக்க எதிர்பார்த்து உள்ளோம்.
எனவே தன்னுடைய சொத்துக்களை பாதுகாக்க வேண்டுமானால் பதுங்கியிருக்கும் இடத்திலிருந்து வெளியே வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கிறோம்.இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களுடன் செய்த அதே சேட்டையை எமது அரசாங்கத்தில் செய்ய முடியாது.குற்றவாளி எவராக இருந்தாலும் நாம் தராதரம் பாராமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல், மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பட்டலந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த மூன்று குற்றங்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்பு கூற வேண்டும்.ரணில் இதுவரை காலமும் அரசியலுக்குள் ஒழிந்துக் கொண்டிருந்தார். இனி எவர் எங்கு ஒளிந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.