மஹவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியனகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிகவெரட்டிய வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (04) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் மஹவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
47 மற்றும் 60 வயதுடைய மஹவ மற்றும் லியனகம பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

