வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற கிரிக்கெட் வீரர் கைது

68 0

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலமுன்ன பகுதியில்  வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து நபரொருவரைத் தாக்க முயன்ற கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டாரா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சனிக்கிழமை (08) இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட  அஷேன் பண்டாரா  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முறைப்பாடு அளித்த நபர் அஷேன் பண்டாராவின் பக்கத்து வீட்டுக்காரர் ஆவார். அஷேன் பண்டாரா காரை வீதியை மறைக்கும்  வண்ணம்  நிறுத்தியமையினால் இருவருக்கும் தகாராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.