ரூ 1 கோடி பெறுமதியான பீடி இலைகளுடன் சந்தேகநபர் கைது

81 0
நீர்கொழும்பு, குட்டிதூவ பகுதியில் கடற்கரை அருகில் வைத்து ரூ 1 கோடி பெறுமதியான பீடி இலைகளை ஏற்றிய லொறியுடன் சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்  நீர்கொழும்பு , கடோல்கலே , தலாதுவ பிரதேசத்தில் வசிக்கும் கட்டிட ஒப்பந்தக்காரராவார்.

நீர்கொழும்பு , குட்டிதூவ  பகுதியில் சிறைச்சாலைக்குப் பின்னால் உள்ள கடற்கரை அருகில் குற்றப் புலனாய்வுத் துறை  பிரிவினர் லொறியை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 2350 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.