எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 57 சுயேச்சைக் குழுக்களும் 18 அரசியல் கட்சிகளும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை 168 உள்ளூராட்சி நிர்வாகங்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பணம் செலுத்து காலவகாசம் 19 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் மார்ச் 17 ஆம் ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது
மேலும், தேர்தல் காலத்தில் அரசு சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தேசிய தேர்தல் ஆணைக்குழு ஒரு சிறப்பு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கை அமைச்சகச் செயலாளர்கள், மாகாண சபைகள், கட்சி பொதுச் செயலாளர்கள், ஆணையச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

