பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை – ஆராய்வதற்கு அமைச்சரவை தீர்மானம்

87 0
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து இவ்வாரம் அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸதெரிவித்துள்ளார்.

1980களின் பிற்பகுதியிலும் 1990இன் ஆரம்பத்திலும் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள் சித்திரவதைகள் மற்றும் அவற்றுடன் அரசியல்வாதிகளிற்கு உள்ள தொடர்புகள்  குறித்த ஆவணமான பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை குறித்து அந்த அரசாங்கம் ஆராயவுள்ளது.

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு  தொடர்புள்ளதாக குற்றம்சாட்டும் இந்த அறிக்கை குறித்து சமீபத்தைய அல் ஜசீரா பேட்டியின் பின்னர் கவனம் திரும்பியுள்ளது.நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களை தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு பொறுப்புக்கூறப்படவேண்டும் என்ற வேண்டுகோள்களும் எழுந்துள்ளன.

ரணில்விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் காணப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சரவை பேச்சாளர் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளார் என்பது தெரியும் இது அனைவருக்கும் தெரிந்த உண்மை குற்றச்சாட்டுகளை எங்களால் நிராகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை  எடுக்கும் என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ள அமைச்சரவை பேச்சாளர் அமைச்சரவையில் இது குறித்து ஆராய்ந்த பின்னர் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என  குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையை அடிப்படையாக வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை இரத்துச்செய்யப்படுமா என்ற கேள்விக்கு அவ்வாறான ஒரு அறிக்கை இருப்பதே நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான காரணமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

1994 இல் சந்திரிகா குமாரதுங்க ஏற்படுத்திய  பட்டலந்தை விசாரணை ஆணைக்குழு பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சித்திரவதைகள்இசட்டவிரோதமாக தடுத்துவைத்தல்இசட்டவிரோத படுகொலைகள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டதுஇஜேவிபியின் கிளர்ச்சியின் போது ஜேவிபியினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசாங்கம் பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை விசாரணை ஈதடுப்பு முகாமாக பயன்படுத்தியது.

1997 இல் வெளியான ஆணைக்குழுவின் அறிக்கை இ பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு இ அக்காலப்பகுதியில் சிரேஸ்ட அமைச்சராக பணியாற்றிய ரணில்விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் தொடர்புள்ளது என தெரிவித்திருந்தது.

பட்டலந்தவில் என்ன நடக்கின்றது என்பது ரணில்விக்கிரமசிங்கவிற்கு தெரிந்திருந்தது அவர் அங்கு சென்று வந்தார்இஎன தெரிவித்திருந்த அறிக்கை ஆனால் அவருக்கு அங்கு இடம்பெற்ற துஸ்பிரயோகங்களுடன் நேரடி தொடர்பிருப்பதை உறுதிப்படுத்தவில்லை.

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்களிற்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்இசிவில் உரிமைகளை பறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவேண்டும்இஎன விசாரணை குழு பரிந்துரைத்திருந்தது.

ஆனால் இந்த பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த அறிக்கை இன்றுவரை சர்ச்சைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.

அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் விட்டதன் மூலம் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் விட்டதன் மூலம் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் ரணில்விக்கிரமசிங்கவை காப்பாற்றியது என விமர்சனங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.