ஹொரணையில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் மூவர் கைது

89 0

ஹொரணை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீமன பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் வெள்ளிக்கிழமை (07) காலை பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் 23, 24 மற்றும் 30 வயதுடையவர்கள் ஆவார்.

சந்தேக நபர்களிடமிருந்து 161 லீற்றர் 250 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 2,049 லீற்றர் கோடா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக  ஹொரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.