வாகன அனுமதிப்பத்திரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தவரை அல்ஜசீரா இடித்து விழுத்தியுள்ளது

81 0

பெராரி காரை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த  முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வீதிவிபத்தில் சிக்குண்டுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அல்ஜசீராவிற்கு ரணில்விக்கிரமசிங்க வழங்கிய பேட்டி குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெராரி வாகனங்களை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தவரை அல்ஜசீரா இடித்து விழுத்தியுள்ளது அவர் தனது புத்தியை இழந்து ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றார் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.