மீகஹகிவுல பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் தகராறு ; நால்வர் காயம்

96 0
பதுளை, மீகஹகிவுல,  அக்கல உல்பத பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளது.

மீகஹகிவுல பகுதியில் வசிக்கும் 20 முதல் 51 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.