இராஜகிரியவில் துப்பாக்கி, தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

72 0

இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் துப்பாக்கி மற்றும் நான்கு தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் வெலிக்கடை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 15, முத்துவெல்ல மாவத்தை பகுதியில் வசிக்கும்  22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.