ஆஸ்திரிய பிரஜையிடம் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் அதிகாரிகள் கைது

76 0

ஆஸ்திரிய பிரஜை ஒருவரிடம் இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆஸ்திரிய பிரஜையிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு சந்தேக நபர்களான பொலிஸ் அதிகாரிகள் மூவரும் ஆஸ்திரிய பிரஜையிடம் 50,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  மூன்று பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.