நாட்டில் அதிகமான மீன்பிடி தொழில் மேற்கொள்ளப்படும் கிழக்கு மாகாணத்தில் முறையான துறைமுகம் ஒன்றுகூட இல்லை. அதனால் ஒலுவில் துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்து அந்த பகுதி மீனவர்களின் மீன்பிடி தொழிலை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (5) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

