எதிர்கால சந்ததியை காப்பாற்றுக“ எம்.பி ரவிகரன்கோரிக்கை

118 0

வடபகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒரு தொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொது மக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றினை பாராளுமன்றில் புதன்கிழமை (05) முன்மொழிந்தார்.

இந்நிலையில் குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணைதொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

போதையினால் நாடு மட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக் கொண்டு தான் இருக்கிறது.

இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன்.

இருப்பினும் சக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நிச்சயமாக மிகவும் பொருத்தமான ஒத்திவைப்பு வேளை பிரேரணையாகும்.

நாட்டின் அதியுயர் பீடமாகக் காணப்படும் பாராளுமன்றிலே, தற்போது நாட்டில் போதைப்பொருட்களால் சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த போதைப்பொருள் ஊடுருவல்கள் பாடசாலைகளில்கூட இடம்பெற்றுவருவதை தற்போதுநாம் அவதானித்துவருகின்றோம்.

போதைப்பொருள் பாவனையால் எமது சந்ததிகள், ஒருதொகுதி எதிர்கால தலைமுறையினர் அழிந்துவருகின்றனர்