எரிபொருள் விநியோகஸ்தர்களிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

110 0

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளனர்.

 

இதன்போது, அவர்கள் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட அழைப்பாணையை தொடர்ந்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தனர்.