“மக்களுடைய நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்”

72 0

மின் சக்தி அமைச்சு எமது நாட்டின் முதுகெலும்பு என்பதுடன் முக்கியமான திணைக்களங்களை கொண்ட அமைச்சாகும்.  இந்த அமைச்சின் பணிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். அதேபோல் நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு, நாட்டினுடைய பொருளாதார நிலையினை கருத்திற்கொண்டு இந்த அமைச்சு செயற்பட வேண்டிய தேவையிருக்கிறது. ஏனைய அமைச்சுக்களை போன்று வெறுமென வியாபார நிறுவனமாக செயற்படாமல் இந்த நாட்டு மக்களுடைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அமைச்சு தனது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற 2025 வரவு – செலவு திட்டத்தின் வலுச்சக்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான. குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.