சபாநாயகர் குறுக்கிட்டதால் சபை சலசலப்பு

75 0

மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான இராசமாணிக்கம் சாணக்கியன் சபை விவாவத்தில் கருத்துத் தெரிவிக்கும் போது, சபாநாயகர் குறுக்கிட்டதால் பாராளுமன்ற அமர்வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

“நீங்கள் பேசுவது தேசிய பிரச்சினை இல்லை” என தெரிவித்த  சபாநாயகர்,   அடுத்த பேச்சாளருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார் .

இதன்போது எழுந்த அர்ச்சுனா எம்.பி., “எங்களது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்புக்களை தரமறுத்து ஏனைய எம்.பிக்கள் வாய்ப்புக் கேட்டால் அவர்களுக்கு வாய்ப்பை வழங்குகிறீர்கள். நாங்கள் வாய்ப்பு கேட்கும் போது வாய்ப்பை தர மறுப்பது ஏன்?” என சபாநாயகருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது சபையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பிக்கு வாய்ப்ப்பு வழங்க கோரியுள்ளார்.

அதன்படி, இறுதியாக சாணக்கியன் எம்.பிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது