பிரான்சில் 12 டெஸ்லா கார்களுக்கு தீவைப்பு: எலான் மஸ்க் எதிர்ப்பு?

116 0

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புதிய நண்பரான கோடீஸ்வரர் எலான் மஸ்க் சர்வதேச அரசியல்வாதியைப் போல பல நாடுகளின் அரசியலிலும் தலையிட்டுவருகிறார்.

அத்துடன், அவர் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துவருகிறார்.

எலான் மஸ்க் எதிர்ப்பு?

இப்படி தேவையில்லாத விடயங்களில் தலையிட்டு, வலதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கத் துவங்கியுள்ளதால், எலான் மஸ்குக்கு எதிர்ப்பு உருவாகி வருகிறது.

எலான் மஸ்குக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, மக்கள், ஏன் சில நாடுகளே, அவரது நிறுவனத் தயாரிப்பான டெஸ்லா கார்களை புறக்கணிக்கத் துவங்கியுள்ளன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரான்சிலுள்ள Toulouse நகரில் அமைந்துள்ள கார் விற்பனையகம் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 12 டெஸ்லா கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தும், எட்டு கார்கள் முழுமையாக நாசமடைந்துவிட்டன, நான்கு கார்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள அதிகாரிகள், இது விபத்து அல்ல என தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் 12 டெஸ்லா கார்களுக்கு தீவைப்பு: எலான் மஸ்க் எதிர்ப்பு? | 12 Tesla Cars Set On Fire In France

தீயணைப்பு வீரர்களும், இந்த சம்பவத்தின் பின்னால் ஒரு குற்றச்செயல், அதாவது தீவைப்பு சம்பவம் உள்ளது என்பதை உடனடியாக கண்டுபிடித்துவிட்டார்கள்.

ஆக, இந்த கார் எரிப்பு சம்பவம் எலான் மஸ்க் எதிர்ப்பின் வெளிப்பாடா என்பது இப்போதைக்கு தெரியவில்லை.