டிரம்பின் வரிகள் நடைமுறைக்கு வந்தன – கனடாவும் சீனாவும் உடனடியாக பதிலடி

91 0

கனடா சீனா மெக்சிக்கோவிற்கு எதிரான அமெரிக்காவின் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து சீனாவும் கனடாவும் பதில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

அமெரிக்காவின் 150பில்லியன் டொலர் பெறுமதியான இறக்குமதிகள் மீது 25வீத வரிகளை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது.

இதேவேளை சீனா அமெரிக்காவின் விவசாய உற்பத்திகள் மீது பத்து முதல் பதினைந்து வீத வரிகளை அறிவித்துள்ளதுடன் பதில் நடவடிக்கையாக அமெரிக்க நிறுவனங்களை இலக்குவைக்கப்போவதாக அறிவித்துள்ளது.